சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைத்து வேண்டி அமைச்சரிடம் மனு…
சிங்கபெருமாள்கோவில் பகுதியில் 2 ஆண்டுகளாக காலியாகவுள்ள இளநிலை மின் பொறியாளர் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தியும் – தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைத்தர வேண்டி அமைச்சரிடம் மனு.
செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனூர் சுங்கச்சாவடி முதல் வண்டலூர் வரையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் விபத்துகள் அதிக அளவில் நடைப்பெற்று உயிரிழப்புகள் ஏற்படுவதால் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டியும்…
மேலும், சிங்கபெருமாள்கோவில் பகுதியிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக இளநிலை மின்பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளதாகவும்,அப்பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு நீடிப்பதாகவும்,நீண்ட நேரம் மின்வெட்டால் அப்பகுதிமக்கள் பாதிக்கப்படுவதாகவும்,அதிகாரி இல்லாத காரணத்தில் பொதும்க்களின் புகார் மனு மீது நடவடிக்கையின்றி அவதிப்படுவதாக,உடனடியாக இளநிலை மின் பொறியாளர் பணியிடத்தை நிரப்பிட வலியுறுத்து,சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் சிங்கபெருமாள்கோவில் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.