தேனி மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குநர் பார்வைக்கு…
தேனி மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குநர் பார்வைக்கு!
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இராமநாதன் காளவாசல் அருகில் செயல்படாத கழிப்பறை அருகே குப்பைகள் பல மாதமாக குவிந்து கிடப்பதால் நோய்த்தொற்று பிடியில் இப்பகுதி மக்கள் உள்ளனர். இதுகுறித்து நகர் மக்களிடம் கேட்டபோது தூய்மை பணியாளர்கள் எங்கள் பகுதிக்கு வருவதில்லை என்றும் இதுசம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனவும் ஏறியா மக்கள் புலம்பி வருகின்றனர்.இதை கருதி பேரூராட்சி இயக்குனர்தான் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என மக்கள் முனுமுனுக்கின்றனர்.