ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை பேர்ல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 8-வது ஆண்டாக 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை…

ராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை பேர்ல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத் தேர்வில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளி மாணவி நூர் ஆபிதா பானு 583/600 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், தாஸீன் ஷஜீனா 574/600 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், இல்மியா பாத்திமா 568/600 பெற்று 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.எம்பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளில் 15 பேர் 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை சீதக்காதி அறக்கட்டளை தலைவர், செயலாளர், அறங்காவலர்கள், பொது மேலாளர், பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்