எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்ஆய்வு செய்து வருகின்றனர்…
எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற சாலை பணிகளை பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு கண்காணிப்பு பொறியாளர் சாந்தி தலைமையில் உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சங்ககிரி உட்கோட்டத்திற்குட்பட்ட மூலப்பாதை கல்வடங்கம் சாலை இடைவழித்தடத்தில் இருந்து இருவழித்தடமாக அகலப்படுத்துதல் பணி, எடப்பாடி உட்கோட்டத்திற்குட்பட்ட சித்தூர்- ஆடையூர்- ஜலகண்டாபுரம் சாலையை மேம்பாடு செய்தல், ஓமலூர் உட்கோட்டத்திற்குட்பட்ட தாரமங்கலம் புறவழிச்சாலை வலுப்படுத்துதல் பணி, மேட்டூர் உட்கோட்டத்திற்குட்பட்ட மேட்டூர் பாலாறு சாலை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது எடப்பாடி கோட்டப்பொறியாளர் கட்டுமானம், பராமரிப்பு அலகு சண்முகசுந்தரம், தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் நடராஜன், சேலம் தரக்கட்டுப்பாட்டு கோட்டப்பொறியாளர் கதிரேஷ், உதவி கோட்டப்பொறியாளர்கள் கட்டுமானம், பராமரிப்பு அலகு சுதா, கவிதா, குபேந்திரன், தரக்கட்டுப்பாடு அலகு சுரேஷ் மற்றும் தேசிய நெடுஞ்சாலை அலகு ரமேஷ்குமார் மற்றும் உதவிப்பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.