சேலம் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி சிறப்பு முகாம்…
சேலம், காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி சிறப்பு முகாம் இரண்டாம் நாளான இன்று அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய சப்-கலெக்டர் மாறன் அவர்களின் தலைமையில் ஜமாபந்தி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட செம்மண்டப்பட்டி வருவாய் கிராம பொது மக்களின் மனுகளை சப்-கலெக்டர் மாறன் அவர்கள் பெற்று கொண்டார்,இம்முகாமில் காடையாம்பட்டி தாசில்தார் கே.நாகூர் மீராசா மற்றும் வருவாய் ஆய்வாளர் பாலாஜி, கல்வி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.