நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் வருகை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.5.2025) நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவப் பணியாளர்களின் வருகை பதிவேடுகள், மருந்து இருப்பு பதிவேடுகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா திரு. கா. ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரூ, இ.ஆ.ப., நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் எம். கீதாஞ்சலி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்