தஞ்சாவூர் மாவட்ட காவல் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ். தஞ்சாவூர் மாவட்ட காவல் சரகத்தில் 2025,ஆம் ஆண்டின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு, ராஜாராம் IPS, தலைமையில் நேற்று 14/5/2025, அன்று நடத்தப்பட்டது,இக்கூட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அலுவலர்கள், காவல் ஆளுநர்கள், மற்றும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உட்கோட்ட பகுதியில் சட்ட ஒழுங்கு மற்றும் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் உயர்திரு, சிவ செந்தில்குமார் அவர்களுக்கு மாவட்ட எஸ்,பி, அவர்கள் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கி பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார்,