குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் இணைந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் இணைந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி மாதம் முழுவதும் நடைபெறவுள்ள கடை,தொழிற்சாலை மற்றும் ஹோட்டல்களில் நடைபெறும் ஆய்வுகளில் சுவரொட்டிகளை ஓட்டுவதற்கு விழிப்புணர்வு சுவரொட்டி மற்றும் குழந்தைகளை பணியில் அமர்ந்தும் கடை முதலாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை மற்றும் சட்டங்கள் குறித்த பலகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட அதை துணை தொழிலாளர் நல ஆணையர் சங்கர், ஹேண்ட் இந்தியாவின் முதுநிலை திட்ட மேலாளர் சரவணன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்வில் பள்ளிச் இடைநின்ற 8 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இறுதியாக ஐநா சபையின் 2025 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின கருப்பொருளான பல முன்னேற்றம், ஆனால் நிறைவே இல்லை. குழந்தை தொழிலாளர் முறையை முடிக்க நேரம் இது என்பதை கருத்தில் கொண்டு குழந்தைகளை யாரும் பணியில் அமர்த்தக் கூடாது மற்றும் குழந்தை தொழிலாளர் யாரும் மாவட்டத்தில் அறவே அகற்றப்பட வேண்டும் என்ற உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு கையெழுத்தும் விட்டனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஷகிதா பர்வீன், ஆறுமுகம் வட்டாட்சியர், தொழிலாளர் ஆய்வாளர்கள் ரானா பகவத், ராமச்சந்திரன் ஞானமூர்த்தி, கோவிந்தன் ஒன்றிய மேலாளர்கள் செல்வி செல்வராஜ் தேன்மொழி கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்