தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின்102வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

தூத்துக்குடியில் வி.வி.டி.சிக்னல் அருகில் திமுக மாநகர் சார்பில் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வந்து பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கிரைண்டர், தையல் மெஷின், சைக்கிள், இஸ்திரி பெட்டி, விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி , நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி, வழங்கினார் இந்நிகழ்வில் சமூக நலம் துறை மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன், மாநகராட்சி துணை செயலாளரும் உறுப்பினருமான கீதா முருகேசன், பிரையாண்ட்நகர் பகுதி செயலாளர் பி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் கட்சி பிரமுகர்கள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டன

தொடர்புடைய செய்திகள்