சேலத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இரா. இராஜேந்திரன் ஆகியோர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்கள்.


நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் ஆகியோர் சேலம் மாவட்ட மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.71.68 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்கள். உடன், மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் நே.பொன்மணி, இ.ஆ.ப, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர்(பொ) ந.லோகநாயகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் * நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.