காஞ்சிபுரம் அரசு பள்ளிகளில் ஸ்டெம் ஆய்வுகூடம், சூரிய சக்தி வசதி திறப்பு விழா.
காஞ்சிபுரம் அரசு பள்ளிகளில் ஸ்டெம் ஆய்வுகூடம், சூரிய சக்தி வசதி திறப்பு விழா
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட சிங்காடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் கீழ் ஆண்டோலின் சமூகப் பொறுப்பு நிதியுதவி மூலம் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வுகூடம் திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
அதுபோல், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழலுக்கு மேன்மை தரும் சூரிய சக்தி வசதியுடன் கூடிய சோலார் பவர் கிரிட் பேனலும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன் தலைமையில் துணைத் தலைவர்கள் சந்திப் முகர்ஜி, லோகேஷ் குமார் கணபதி, பிரேம் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஆண்டோலின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் பிளானட் மேலாளர் மீனாட்சி சுந்தரம் வாலாஜாபாத் வட்டாரக் கல்வி அலுவலர் கண்ணன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எழில், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் தேவேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுரேஷ் மற்றும் சோமு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் புருஷோத்தமன் மற்றும் மலர்விழி ஆகியோர் வரவேற்பை அளித்தனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கான இந்த புதிய வசதிகளை வரவேற்றனர்.
நிறைவாக முதன்மை மேலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்
