தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி,
தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்
சென்னை எழிலகத்தில் இன்று நடைபெற்றது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தை சென்னை எழிலகத்தில் இன்று நடத்தினோம். நம்முடைய #திராவிட_மாடல் அரசு செயல்படுத்தி வரும் முக்கியத் திட்டங்களான மகளிர் விடியல் பயணம், முதலமைச்சரின் காலைச்சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்றவை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து திட்டக்குழு சார்பில் ஏற்கனவே முதலமைச்சர் அவர்களிடம் அறிக்கை அளித்த நிலையில், அடுத்தடுத்து, திட்டக்குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசித்தோம். குறிப்பாக நம்முடைய அரசின் திட்டங்களை அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதோடு, அவற்றின் தற்போதைய நிலைகுறித்தும் ஆலோசித்தோம். திட்டக்குழுவின் இந்த ஆலோசனைக்கூட்டம், ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும் என்பதில் மகிழ்ச்சியுடன் செயல்படுத்தி வருகிறோம்.