ராமநாதபுரம் நகரில் உள்ள முதல்வர் வர்த்தக விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார் ..

ராமநாதபுரம் மாவட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கூட்டுறவுத் துறையின் மூலம் சென்னையில் முதல்வர் மருந்தகங்களை துவக்கி வைத்ததை யொட்டி ராமநாதபுரம் நகரில் உள்ள முதல்வர் வர்த்தக விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம்,துணைத் தலைவர் பிரவீன் தங்கம், சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் மொய்தீன்
உள்ளிட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய குழு தலைவர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்