கடலாடி நகர் வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாக திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. ரூபாய் 7.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதுசமயம் கடலாடி தாசில்தார், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர், அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், கிராம நிர்வாக அலுவலர், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், அரசு அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர். கடலாடி தொழிற்பயிற்சி நிலைய இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் முழுமையாக நிரம்பிவிட்டது.

இதற்கு பெரும் முயற்சி எடுத்த வர்த்தக சங்கத்திற்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரை வரவேற்ற கடலாடி நகர் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பேருந்து வசதி, பேருந்து நிலையத்திலிருந்து புதிய தார்சாலை, கடலாடியிலிருந்து வெளி ஊருக்கு அதிகாலை மற்றும் இரவு நேர பேருந்துகள் கால அட்டவணை நீட்டிக்கவும், தீயணைப்பு நிலையம் அமைக்கவும், கிழக்கு கடற்கரை நான்கு வழிச் சாலை திட்டத்தில் கடலாடியை இணைக்க வேண்டியும் குறிப்பிடபட்டுள்ளது. கோரிக்கைகளை பரிசிலிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்