முதுகரை கிராமத்தில் ஸ்ரீபெரியாண்டவர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பால விநாயகர்
மற்றும் ஸ்ரீ பெரியாண்டவர் கோயில் அப்பகுதி மக்களால் பழைய புதுப்பித்து கட்டப்பட்டது.

அதனை முன்னிட்டு மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. புதன்கிழமை காலை மேல தாளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் ஆலய நிர்வாகி என். சங்கர் தலைமை தாங்கி யாகசாலை இருந்து புனித கலசங்களை ஏந்தி கோயிலில் வலம் வந்து கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரியாண்டவர்க்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாரதனை ஆகியவை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஸ்ரீபெரியாண்டவரை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகரை கிராம பொதுமக்களும் விழா குழுவினரும் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்