தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ. 8 லட்சம் நிவாரணத் தொகை…!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர் மேற்கு ஒன்றியம் அரியக்குடி வாழவந்தாள் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் இரு மகள்களான செய்யது அஸ்பிதா பானு (13)(ம) சபிக்கபானு (9)ஆகிய இருவரும் சமீபத்தில் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த செய்தி அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ. 8 லட்சம் நிவாரணத் தொகைக்காண காசோலையை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் (ம) பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பரமக்குடி கோட்டாட்சியர் சரவண பெருமாள் (ம) பரமக்குடி வட்டாட்சியர் வரதன்,கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன்,போகலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் போகலூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கதிரவன் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பூமிநாதன் மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டி (ம) கிளைச் செயலாளர் கணேசன் (ம)கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்