நெல் கொள்முதல் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு…
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., தொடங்கி வைத்து, ஆனைமலை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பழனிகுமார் பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மல்லிகா ஆகியோர் உள்ளனர்.