பாதாள சாக்கடை திட்ட சீரமைப்பு பணி…

ராமநாதபுரம் மாவட்டம். ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடைத்திட்ட குழாய்கள் உடைந்து சேதமடைந்ததால் பல இடங்களில் கழிவுநீர் வெளியேறி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தின் பார்வைக்கு நகர்மன்ற தலைவர் கார்மேகம் கொண்டு சென்றதின் பயனாக தமிழக அரசின் சார்பில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்ட சீரமைப்பு பணி நடைபெற்று வருவதை ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனை அடுத்து அப்பகுதிமக்கள் நகர் மன்ற தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்