அரசு தொடக்கப்பள்ளி சார்பில் தீவிர மாணாக்கர் சேர்க்கை ஊர்வலம்…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் உ.அம்மாபட்டி அரசு தொடக்கப்பள்ளி சார்பில் தீவிர மாணாக்கர் சேர்க்கை ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார், மற்றும் ஆசிரியர்கள் மனோஜ்பிரபு, வசந்தி, கோதை, அருணா, ஏழிசைவல்லபி,இவர்களுடன் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் 5வயதிற்கு மேற்பட்ட தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், இந்த நிகழ்வில் பெற்றோர் சார்பாக முத்து, பாண்டீஸ்வரி அவர்கள் மாணாக்கருக்கு தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், மற்றும் சிற்றுண்டிகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்