தேனி மாவட்ட மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு…
தேனி மாவட்ட மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் தலைமையிலும்,மாவட்ட செயலாளர் தினேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் அமைப்பின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு அண்ணலின் திருவுருவ படத்திற்கு ஆர்ச் அமைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.மேலும், இந்நிகழ்வில் அவைத்தலைவர் தொழிற்சங்க செயலாளர் காளிதாஸ்,இளைஞர் அணி தலைவர் ஈஸ்வரன்,மகளிர் அணி தலைவி ஜெயலீலா, செயலாளர் விஜயா ரவி, கணேசன், சுப்பிரமணி, கஸ்தூரி, வேல்முருகன், மதன்குமார் மற்றும் பழங்குடியின மக்களும் பொதுமக்களும் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்