நிபா வைரஸ்: தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமி ழக – கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிக ளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா மாநிலம் மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபாவைரஸ் வேகமாக பரவிவருகிறது. வைரஸ் பரவலை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படு த்தியுள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள நீலகிரிமாவ ட்டம் கூடலூர் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகம் வருகை புரிகின்றனர். இதனால்,தமிழக கேரளா எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது 8 சோதனைச் சாவடிகளில் நிபா வைரஸ் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு-கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் உள்ள, தாளூர், கீழ்நாடுகாணி, சுக்கநள்ளா, பட்டவயல், கெத்தை உள்ளிட்ட 8 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கேரளா மாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சோதனைச் சாவடியில் வெப்பக் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பரிசோதனையில், பயணி களுக்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அவ ர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேபோல், வெளவால்கள் கடித்த பழத்தால் நிபா வைரஸ் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் பழங்கள் இருக்கிறதா? என்றும் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டால் உட னடியாக அருகில் உள்ள ஆரம்பசுகா ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதளை மேற்கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்