கமுதியில் அதிமுக மேற்கு மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பானவரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் தொகுதி வாரியாக தமிழக முழுவதும் மக்களை சந்திப்பு கலந்துரையாடல் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் வரும் 30-ம் தேதியும் 31-ம்
தேதி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் சந்திப்பு கலந்துரையாடல் பிரச்சாரத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார்.இதில் கமுதி மேற்கு ஒன்றியம் மற்றும் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒரு பூத்து வாக்கு சாவடிக்கு குறைந்தது 200 பேர் வீதம் பத்தாயிரம் பேர் வீதம் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து கமுதி தனியார் திருமண மஹாலில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். கமுதி அதிமுக மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருமலையான், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா, ஒன்றிய அவைத் தலைவர் சேகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்
நிகழ்ச்சியில் கமுதி மேற்கு ஒன்றிய கழகம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் நிர்வாகிகள் தொண்டர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
