மாணவர் விடுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் வளர்க்கப்பட்ட 100 மரங்கள் சாய்ப்புபொதுமக்கள் ஆதங்கம்
கோவை காளப்பட்டியில் உள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர் விடுதியில் கடந்த 22.02.2023 பிப்ரவரி மாதம் பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு சி எஸ் ஆர் திட்டத்தின் மூலம் பாஷ் குளோபல் நிறுவனம் மற்றும் கூடு தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து 2500 மரக்கன்றுகள் அப்போது இருந்த கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதீப் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மற்றும் தண்ணார்வலர்களால் நடப்பட்டு விழா நடைபெற்றது. அன்றிலிருந்து இன்று வரை தன்னார்வ தொண்டு நிறுவனம் தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை மரமாக வளர்த்து வந்த நிலையில் அங்குள்ள விடுதிக்காப்பாளர் குணசேகரன் தன்னிச்சையாக மரங்களுக்கு தண்ணீர் விட வருகை தரும் தொண்டு நிறுவனத்தினரை விடுதிக்குள் அனுமதிக்காமல் அடாவடி செய்துள்ளார். சில சமயங்களில் வாய் கூசும் அளவிற்கு பேசியுள்ளார்.
இந்நிலையில் வழக்கமாக பராமரிப்பு பணிக்காக கூடு நிருவன ஊழியர்கள் சென்று பார்த்த பொழுது விடுதிக்காப்பாளர் குணசேகரன் பொக்லின் வண்டி உதவியுடன் 100 மரங்களை சாய்த்து தரைமட்டம் செய்துள்ளது தெரியவந்தது.
இதனால் அங்குள்ள பொதுமக்கள் கூறும் பொழுது தமிழக அரசு மரங்களை வளர்க்க வேண்டும் என பள்ளி மாணவர்களை வலியுறுத்தி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நன்றாக வளர்ந்த மரங்களை சாய்த்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளதாக மக்கள் கூறினர். இதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்
