சென்னை:தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு , அவர்களின் பயணம் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு காவல்துறையினராலும் தமிழக அரசாலும் மகளிர் உதவி எண் 1091 தொலைபேசி எண்ணை அறிமுக படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு , அவர்களின் பயணம் பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு காவல்துறையினராலும் தமிழக அரசாலும் மகளிர் உதவி எண் 1091 தொலைபேசி எண்ணை அறிமுக படுத்தப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் தனியாக பெண்கள் ஓலா மற்றும் கால் டாக்ஸி ,ஆட்டோ களில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்ய நேரிடும் பொழுது மகளிர் உதவி எண் 1091 எண்ணை டயல் செய்வதன் மூலம், அவர்களின் பயணத்தை ஜிபிஎஸ் கருவி மூலம் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர், செல்லும் வழியில் ஏதாவது இடையூறுகளோ ஆபத்துகளோ ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களுக்கு பாதுகாப்பும் உதவியும் செய்வார் கள், இதன் மூலம் பெண்களின் பயணம் பாதுகாப்பாக அமையும்!
