கமுதி பேரூராட்சி தூய்மைபணியாளர்கள் பணிசுமை அதிகரிப்பதாக. கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர் . . . .
ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சியில் சுமார் 27 நிரந்தர தூய்மைபணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர் இதில் ஆறுபேர் பணிநிறைவு பெற்றுள்ளனர் மேலும் ஆறுபேர் வருகைபதிவேட்டில் மட்டும் கையேப்பம் இட்டு மாற்றுப்பணி செய்துவருகின்றனர் இதனால் தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது இதனால் வாறுகால் அள்ளமுடியவில்லை நகரில் குப்பைகளை அள்ள பத்துமணி ஆகின்றது ஆகவே இதனை சரிசெய்து தரவேண்டும் என தூய்மைபணியாளர்கள் செயல்அலுவலர் தலைவரிடமும் மனுவழங்கினார்களாம் எந்த நடவடிக்கை இல்லாமல் போகவே திடீர்னு ஒருநாள் காலையில் அலுவலகத்தில் இருந்து வேலைநிறுத்தம் செய்தனர் உடனே நிர்வாகத்தினர் பேசி வேலைபார்க்க வைத்தனர் நாள்கள் சென்றதே ஒழிய தீர்வு கிடைக்கவில்லை ஆகவே திங்கள் காலை வேலையை முடித்துவிட்டு பரமக்குடி கோட்டாசியரிடம் சென்று மனுவழங்கினர் பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் சென்று மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளனர் மனுவில் ஆறுபேர் பணிக்கு வராததால் எங்களுக்கு பணிசுமை அதிகமாகிறது வேலையும் தேக்கம் அடைகின்றது தாழ்த்தப்பட்ட சமூகமே தூய்மை பணியினை செய்யவேண்டியுள்ளது ஆகையால் மாவட்டஆட்சிதலைவர்ஆகிய தாங்கள் உரியநடவடிக்கை எடுக்க. வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என மனுவழங்கியுள்ளனர் இவர்களது பணிசுமை காரணமாக கமுதி பேரூராட்சி 15 வார்டுகளிலுமே வாறுகால் அள்ளும் பணி தேக்கம் அடைந்துள்ளது இதனால் டெங்கு மலேரியா பரவ வாய்ப்புள்ளது ஆகவே மாவட்ட ஆட்சியர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

