ராமநாதபுரம் மாவட்ட மதிமுக சார்பில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் மாவட்டச் செயலாளர் வி.கே.சுரேஷ் தலைமையில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட மதிமுக சார்பில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் மாவட்டச் செயலாளர் வி.கே.சுரேஷ் தலைமையில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக மதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் வைகோ முதன்மை செயலாளர் துரை வைகோ (ம) உயிரினும் மேலாக கருதும் கட்சி கொடியை அவமதிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்.அவர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பியும் சாதி மோதல்களை தூண்டு விதமாகவும் தலைமை நிர்வாகிகளான வைகோ,துரை வைகோவிற்க்கும் அவதூறு பரப்பி நன் மதிப்பை கிடக்கும் வண்ணமும் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் கட்சியின் முன்னாள் , இன்னால் நிர்வாகியின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் சமூக ஊடகங்களில் பேசிய வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்