தூத்துக்குடி: கோவில்பட்டியில் பதவியை பிடிப்பதில் த வெ க வினர் கோஷ்டி மோதல்:கோவில்பட்டியில் தாவே க வினர் இடையே இளைஞர் அணி பதவியை பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்! சமாதான பேச்சு வார்த்தை நடந்த போது இந்த மோதல் நடைபெற்றது…
தூத்துக்குடி: கோவில்பட்டியில் பதவியை பிடிப்பதில் த வெ க வினர் கோஷ்டி மோதல்:
கோவில்பட்டியில் தாவே க வினர் இடையே இளைஞர் அணி பதவியை பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்! சமாதான பேச்சு வார்த்தை நடந்த போது இந்த மோதல் நடைபெற்றது…
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக இதுவரைக்கும் முறையாக பொறுப்புகள் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது! இதனால் அந்த கட்சி பிரமுகர்கள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி தொடர்பாக கோவில்பட்டியைச் சேர்ந்த சுமங்கலி ராஜா என்பவர் தலைமையிலான அணியினருக்கும், சுரேஷ் என்பவர் தலைமையிலான அணியினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது,
இது பிரச்சனையில் இருதரப்பினரும் வாட்ஸ்அப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். எந்த சூழ்நிலையில் சுமங்கலி ராஜா அணியை சேர்ந்த மனோஜ் என்பவர் சுரேஷ் பற்றியும் சுரேஷ் மீது உள்ள வழக்குகள் பற்றியும் வாட்ஸ் அப்பில் பதிவு செய்தது வைரலாகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை உச்சத்துக்கு வந்ததால் இருதரப்பினரும் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடலாம் என்ற சுமூக முடிவு எடுப்பதற்காக நேற்று அதிகாலை கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள மண்டபம் ஒன்றில் சந்தித்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர், அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது?

