அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்…
எங்கள் பதவி காலத்தில் 2006-2011ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் வடகால்
பகுதியில் கட்டப்பட்ட
சுற்றுச்சுவர் எரிமேடை
சுடுகாடு சாலை வசதி செய்து தரப்பட்டது.
ஆனால் இப்போது அந்த இடமே மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேலும் அப்போதைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மத நல்லிணக்கம் கடைப்பிடிக்கும் ஊராட்சியாக தேர்வு செய்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பெற்ற
பரிசு தொகையில்
வடபாதி மற்றும் தென்பாதி பகுதிகளில்
கட்டப்பட்ட எரிமேடை
சுற்று சுவர் சிதிலமடைந்துள்ளது.
இதையெல்லாம் சீரமைக்க லட்சக்கணக்கில்
டெண்டர் விடப்பட்டு தான் செய்யவேண்டிய அவசியம் இல்லை.
இதையெல்லாம்
உடனடியாக சீரமைக்க
இயலாத பட்சத்தில்
எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை அனுமதி வழங்க வேண்டுகிறேன்.
என்றும் பணிவுடன் ஆத்தூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர்.திருமதி. சுந்தரிசுப்ரமணியன்.
