கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் கோவில் ஆடி பொங்கல் திருவிழா காப்பு கட்டு கொடியேற்றத்துடன் துவக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 25-ம் ஆண்டு ஆடி பொங்கல்
திருவிழா நேற்று காப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
முன்னதாக சிவாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, பூரணாகுதி,தீபாதாரணை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சக்தி மாரியம்மன் உருவம் பொறித்த கொடி பட்டத்தை வானவேடிக்கை, மேள
தாளம், இசை வாத்தியங்களுடன் கிராம
பொது மக்கள் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர்.பின்னர் சக்தி மாரியம்மன் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு,அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை தீபாதாரனை நடைபெற்று மூலவர் சக்தி மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாதாரனை நடைபெற்றது.நேர்த்திக் கடன் செய்யும் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கூல் பிரசாதம் வழங்கப்பட்டது. வரும் 7-ம்
கோவில் முன்பு திருவிளக்கு பூஜையும்,
8-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு
அக்னிச்சட்டி, சேத்தாண்டி
வேஷம் இடும் நேர்த்திகடன் உட்பட பல்வேறு நேர்த்திக் கடன்கள் பக்தர்கள் செலுத்தும் நிகழ்ச்சியும்,
9-ம் தேதி சனிக்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெற உள்ளது

