செவ்வாய் சனி தோஷம் தீர்க்கும் பழனி முருகன்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும்.. இங்குள்ள முருகன் சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாகும்.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவர்
பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் ஒரு பெரிய தராசின் உதவிகொண்டு பழனிமலையையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
முருகனின் சிலை நவபாசாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாசாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாசாண சிலை மீன்களைப் போன்ற செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இந்தச் சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்தச் சிலையின் மீது முழுவதுமாகச் சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் காணும் அனைத்து அடியவர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்