தேனி மாவட்டம் போடி கீழத்தெரு ராஜன் சுப்புத்தாய் மண்டபத்தில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் 23 துறைகளை சார்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் பங்கேற்று பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றனர்.பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் பத்து நபர்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருவாய் துறையினரால் பட்டா ,மருத்துவ காப்பீடு அட்டை,ரேஷன் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்த முகாமில் மூன்றாவது பகுதி நகர் மன்ற உறுப்பினர் நதியா பானு சாகுல்,திமுக நகரக் கழக செயலாளர் புருசோத்தமன்,வட்டாட்சியர் சந்திரசேகரன்,நகராட்சி ஆணையாளர் பார்கவி,திமுக நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சேக் அப்துல்லா சாகுல் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


