கூடாரம் அமைத்து தங்கிவழிபடும் மக்கள் . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

திருவிழாவை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் உட்பட 2000 பக்தர்களுக்கும் மேல் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம். பக்தர்கள் ஆடி முதல் தேதி காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை தூத்துக்குடி தேனி நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்பு கட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: சந்தன மாரியம்மன் ஆடி திருவிழாவிற்கு கடந்த பல ஆண்டுகளாக மாலை அணிந்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டும் ஆடி முதல் தேதி மாலையிட்டு கோயில் அருகே கூடாரம் அமைத்து விரதம் இருந்து வருகின்றோம். கோயிலின் விசேஷமாக மாலை அணிவித்து கோயில் அருகே தங்கி இருப்பதால் தங்களது நேர்த்திகடன் நிறைவேறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அக்னிச்சட்டி, பால்குடம் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது நடைபெறும் என்றார். விழாவில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக கருங்குளம் கிராம மக்கள் தங்கி இருக்கும் வெளி மாவட்ட பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே கூடாரம் அமைத்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேண்டுதல் பலிக்கும் என்பதால் வருடா வருடம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது விழா அன்று கமுதி காவல்துறையினர் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்

தொடர்புடைய செய்திகள்

தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற 14.08.2025 வியாழக்கிழமை அன்றுவழிகாட்டும் மையத்தில்நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிநடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.