ராமநாதபுரம், ஆக.13 – முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காணொளிக்காட்சியின் மூலம்தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்துவக்கி வைத்தார் இதன் படி ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்க விழாவில் வனம், கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் பங்கேற்றனர்.

இத்திட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் வாகன சேவையை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்.அமைச்சர் தெரிவிக்கையில்,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்த தாயுமானவர் இத்திட்டம் மூலம் 70 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடைகளிலிருந்து உணவுப் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதால் இத்திட்டம் அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 23,191 குடும்ப அட்டைகளில் 31,289 பயனாளிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவர். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2வது சனி, ஞாயிற்றுக்கிழமை தோறும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். பயனாளிகள் பயன்பெற வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். இதில்
கருமாணிக்கம் எம்எல்ஏ, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஜூனு, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள், கூட்டுறவு சங்க மண்டல துணைப்பதிவாளர் ராஜகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன், முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்