மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் ரூபாய் 2.77 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் .கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் ரூபாய் 2.77 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பணியினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் .கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் நிறுத்துமிடம், நுழைவு வளைவு, மேற்கூரை, 7 கடைகள், அலுவலக அறை, பணியாளர் ஓய்வறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன





