தமிழக யாதவர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கோகுல மக்கள் கட்சியின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எம்வி .சேகர் தலைமையில் தமிழக யாதவர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் நிறுவனத் தலைவர் எம்வி . சேகர் பேசும் பொழுது :- சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அவரவர்க்குரிய விகிதாச்சாரம் முறையில் இட ஒதுக்கீடு கிடைத்திடவும் ஏதோ ஒரு சில ஜாதியை மக்களுக்கு மாத்திரம் இட ஒதுக்கீடு சலுகைகளை வலியை சென்று வாரி வழங்கும் தமிழக அரசு ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு தடவி பார்க்கும் மனோபாவத்தை கைவிடுமாறும் செஞ்சி கோட்டையை 300 ஆண்டுகள் பரம்பரையா ஆட்சியின் செய்து வந்த அப்போதைய மன்னர்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் சிலைகள் அமைத்தும் பாட புத்தகங்கள் அவர்கள் வாழ்ந்த வரலாறுகளை எழுதி வெளியிடவும் அவர் பேசினார்.