கமுதியில் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி 13- ம் ஆண்டு நினைவேந்தல் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் 2000 பேர் பங்கேற்பதாக தீர்மானம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காவடிபட்டியில் உள்ள முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் திமுக தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி நினைவிடத்தில் வரும்
31-ம் தேதி அவரது 13-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது .
இவர் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் தந்தை ஆவார். இவரது நினைவேந்தல்
நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றியம், கமுதி மற்றும் அபிராமம் பேரூர் கழகம் சார்பில் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவடிபட்டியில்
உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது குறித்து,
நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார். கமுதி பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், அபிராமம் பேரூர் கழக செயலாளர் ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் வடக்கு ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன்,கமுதி பேரூர் கழக அவைத்தலைவர் லெட்சுமணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ்,
துணைத் தலைவர் அய்யனார்,மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன், காசிலிங்கம், சேசுராஜ், நந்தகோபால், மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், பழனி, கார்த்திகைசாமி, வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி,
மகளிரணி தங்கலெட்சுமி பூங்கொடி, நூர்தின், ராஜேந்திரபிரசாத், சின்னாண்டு, கமுதி பேரூர்கழக இளைஞரணி அமைப்பாளர் செய்யது கரிமுல்லா உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.