தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை மாநகர கள ஆய்வுக்காக சென்னையிலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் சென்றார்,
கோவை மாநகர மக்கள் தமிழக முதல்வரை அலைகடலென திரண்டு உற்சாகத்தோடு வரவேற்றனர், கோவை மக்களின் உற்சாகத்தையும் வரவேற்பையும் பார்த்த தமிழக முதல்வர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்களைப் பார்த்து சந்தோஷத்துடன் கையசைத்தவாறு சென்றார்! அதன் பின் கோவை மாநகர கள ஆய்வுகளை மேற்கொண்டு தன் பணிகளை முடித்துவிட்டு திருப்பூர் புறப்பட்டுச் சென்றார்! திருப்பூர் மாநகர மக்கள் பெருந்திரளாக முதல்வரை ஆர்வமுடன் வரவேற்றனர்! அரசு உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு க ஸ்டாலின் திருப்பூர் மக்களுக்கு வழங்கினார்! அதன் பின் மேடையில் முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றுகையில் திருப்பூர் மக்களுக்கு 7 முக்கிய அம்ச திட்டங்களை அறிவித்தார்!
முதல்வர் அறிவித்த ஏழு அம்ச முக்கிய திட்டங்கள் அனைத்தும் திருப்பூர் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாகும்! இந்த ஏழு அம்ச முக்கிய திட்டங்களை முதல்வர் மேடையில் வாசிக்கும் பொழுதே திருப்பூர் மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், கரகோஷத்துடனும், தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
