கும்பகோணம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு!!

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் நிலத்தை முறைகேடாக முன்னாள் கோவில் பூசாரி ஆக்கிரமிப்பு செய்து அவருடைய மருமகனுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார் என தெரிய வருகிறது, இதை அறிந்த இந்து முன்னணி குடந்தை ஒன்றிய செயலாளர் தென்னூர் சதீஷ்குமார் தலைமையில் இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை கோவில் திருவிழாவை காரணம் காட்டி தற்சமயம் அகற்றி உள்ளனர், மேலும் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர அறநிலையத்துறை தலையீடு செய்து கோவில் சொத்தை மீட்டு தர வேண்டும் என நமது ஊடகம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர்,
மேலும் இந்த நிகழ்வில் பாரதிய கிசான் சங்கம் தஞ்சை மாவட்ட செயலாளர் பார்த்திபன், பாபநாசம் கிழக்கு ஒன்றிய பாஜக செயலாளர் திருமலை செந்தில், சோழன் மாளிகை அசோக், பட்டீஸ்வரம் அரவிந்த், ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்