தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவுபடுத்தி துவக்கி வைத்த நிலையில் தேனி மாவட்டம் போடி நகராட்சிக்கு உட்பட்ட 25 ஆவது வார்டு பகுதியில் உள்ள பங்கஜம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் துவக்கி வைத்தார்.

குழந்தைகளுக்கு உணவு பரிமாறி குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து நகர் மன்ற தலைவர் துணைத் தலைவர் நகராட்சி ஆணையாளர் ஆகியோர்கள் உணவு அருந்தினர். குழந்தைகளுக்கு காலை உணவாக பொங்கல் கேசரி வழங்கப்பட்டது. இளம் சிறார்கள் காலை உணவினை ரசித்து ருசித்து உட்கொண்டனர். முதலமைச்சரின் இந்த காலை உணவு திட்ட உணவு தயார் செய்யும் மகளிர் குழுக்களிடம் சிறப்பாகவும் தரமாகவும் நாள் தோறும் குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டுமென நகர் மன்ற தலைவரும் ஆணையரும் அறிவுறுத்தி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சங்கர்,நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி,தலைமை பொறியாளர் குணசேகரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் முருகேசன், மகேஷ்வரன்,ராஜா, மரைக்காயர் சேட், ரமேஷ்குமார்,பிரபாகரன்,லதா ,25-வது வார்டு செயலாளர் கணேசன்,மாவட்ட விவசாய தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி மற்றும்சுகாதார அலுவலர் மணிகண்டன் ,திருப்பதி திமுக வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .