மதுரை மாநகராட்சி சாலைகளில் ‘மரணக்குழி

மதுரை மாநகராட்சி சாலைகளில் ‘மரணக்குழி

கிராமப்புற தாறுமாறு சாலைகளிலும் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்

நிதி ஒதுக்கியும் சாலைகள் போடவும் இல்லை; சீரமைப்பு பணியுமில்லை

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 1976 கி.மீ.,க்கு 13 ஆயிரத்து 498 ரோடு கள் உள்ளன. இவற்றில் 733 ரோடுகள் சேதமடைந்ததில், 620 கி.மீ., வரை 2019 முதல் 2024 வரை சீரமைக்கப்பட்டன. மீத முள்ள 113.55 கி.மீ.,க்கு ரோடுகள் சீரமைக்கப்பட இருந்தது. 2024 அக்டோபர், நவம்பரில் பெய்த மழையால் ரோடுகள் மிகவும் மோசமான நிலைக்கு சென்றன.

இதையடுத்து மாநக ராட்சி சார்பில் புதியரோடு அமைக்கவும், பழைய ரோடுகளை சீரமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன்படி 15.149 கி.மீ.,க்கு 71 ரோடுகள் அமைக்கவும், 743 ரோடு களை சீரமைக்கவும் நிதி ஒதுக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பினர். முதற்கட்டமாக ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கான டெண்டரும் விடு விக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர் களுக்கு இதுவரை ‘ஓர்க் ஆர்டர் வழங்கவில்லை.

இதனால் நகரில் பல பகுதிகளில் குண்டும் குழி யுமான ரோடுகளில் தான் வாகனங்கள் சென்று வரு கின்றன. குறிப்பாக அரசரடி சிக்னலில் இருந்து மதுரை கோட்ஸ் பாலம் வரையான சாலைகள் தான் அதிகம்.

மதுரை மாநகராட்சி சாலைகளில் வாகனம் ஓட்டுவதும், மலைக் குன்றுகளில் சாகச பயணம் மேற்கொள்வதும் ஒன்றுதான் என நினைக்கும் அளவுக்கு ரோடுகள் பெயர்ந்தும், மேடுபள்ளங்களாகவும் தாறுமாறாக கிடக்கின்றன. புதிய சாலை அமைக்கவும், சேதமான சாலைகளை சீரமைக்கவும் நிதி ஒதுக்கி ஒரு மாதமாகியும், குடிநீர் திட்டப் பணிகள் முடியாததால் பணிகளை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.

மதுரை எல்.ஐ.சி., ரோட்டில் உள்ள மேடு பள்ளங்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

மதுரையின் ‘நம்பர் ஒன் ” சாகச ரோடாக உள்ளது. இந்த ரோட்டில் ஒருவாரம் தொடர்ந்து டூவீலரில் சென் றால், அடுத்து டாக்டரை தான் தேட வேண்டும். இதற்காகவே பெரும் பகுதி செலவும் செய்ய வேண்டி உள்ளது. இதேபோல் வண்டியூர்- ரிங்ரோடு செல்லும் ரோடு, அண்ணா பேருந்து நிலையம் முதல் வைகை வடகரை பகுதி பழங்கா நத்தம், ஓபுளா படித்துறை
வைகை தென்கரை ரோடு, ராஜாமில் ரோடு-கர்டர் பாலம், எல்.ஐ.சி., பாலம் ஸ்டேஷன் ரோடு, ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு, ஜீவாநகர் மெயின் ரோடு, செல்லுார் 30 அடி ரோடு, பெத்தானியாபுரம் அண்ணா மெயின் ரோடு, மேட்டுத்தெரு, ஆவின் பின்புறம் உழவர் சந்தை ரோடு… என வாகன ஓட் டிகளுக்கு ‘மரண’ பீதியை ஏற்படுத்தும் மரண குழிகள் உள்ள மோசமான சாலைகளின் பட்டியல்கள்
தொடர்கின்றன.ஆனால் அந்த சாலைகள் சீரமைப்பில் மாநகராட்சி நிர்வாகம் அக்கறை செலுத்தவே இல்லை.

வாகன ஓட்டிகள் கூறியதாவது: மதுரை நகரில் டூவீலர்களில் செல்வதென்றால் அடிவயிறு கலங்குகிறது. பாலப் பணிகளால் பல இடங்களில் நெரிசல் ஏற்படுகிறது. பல சவால்களைத் தாண்டி தான் பயணிக்க முடிகிறது. ரோடுகளை சீரமைக்க மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள், எம். எல்.ஏக்கள், மேயர், கமிஷனர் வழக்கமாக செல்லும் சொகுசு கார்களை தவிர்த்துவிட்டு, ஆட்டோ அல்லது இருசக்கர வாகனங்களில் ஒரு முறை இந்த சாலைகளில் பயணித்தால் தான் மக்களின் வலி தெரியும் என்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டுவரும் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான குழாய்ப் பதிப்பு பணிகள் முடிந்த பின்பே சாலை பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்

அதற்கு முன் சாலைகள் அமைத்தால் குழாய்கள் பதிப்பதற்காக மீண்டும் தோண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும். விரைவில் மோசமான ரோடுகள் சீரமைக் கப்படும்’ என்று கூறுகின்றனர்.
இந்தியாவின்முதுகெலும்பு என்று கூறப்படும் கிராமப்புறச் சாலைகளின்நிலைமை சொல்லி மாளாது என்கின்றனர்.புதிதாக போடப்பட்ட சாலைகள் இரண்டு மூன்று மாதங்களில் பெயர்ந்து விடுகின்றது என்கின்றனர் கிராமப்புற உள்ள சாலைகளில் பெரும்பாலும் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலைகளின் அகலம் குறைந்து கொண்டே வருகிறது இதனால் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அந்தந்த பகுதியில் ஏற்படும் சாலை பழுது பணிகளையும் மற்றும் சீரமைப்பு பணிகளையும் உடனடியாக சரி செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்