பெரம்பலூர் மாவட்டம்”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில், பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை இன்று (15.07.2025) தொடங்கி வைத்து, துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட நிகழ்ச்சியினை நகர்ப்புறத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட என்.எஸ்.கே மஹாலிலும், ஊரக பகுதிகளுக்காக வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொதுமக்கள் காணும் வகையில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வினை ஏராளமான பொதுமக்கள் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டனர்.
உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான சிறப்பு முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில், முகாமில் துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுக்களை விரைந்து பதிவு செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பிட அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் சேவைகள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் கிடைத்திடும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புறம், ஊரகப் பகுதிகளில் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறத்தில் 86 முகாம்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாம் தொடர்பாக தன்னார்வலர்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களும் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்களை வழங்கி பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை விவரித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 08 முகாம்கள் 15.07.2025 அன்று (செவ்வாய் கிழமை) முதல் 18.07.2025 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் காலை 09.00 மணியிலிருந்து மதியம் 03.00 வரை நடைபெறும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 46 வகையான சேவைகள் இந்த முகாம்களின் மூலம் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த சேவைகள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் கோரிக்கை மனுக்களை வழங்கலாம். அவ்வாறு முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் 25 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வழங்கினார்.
நகர்புறத்திற்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரம்பலூர் என்.எஸ்.கே திருமண மஹாலில் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் பதிவு செய்யப்படும் பகுதியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அப்போது காதொலி கருவி வேண்டி ஜெயசக்தி என்பவர் மனு அளித்தார். அம்மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பயனாளிக்கு வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காதொலி கருவி பெற்ற பயனாளி ஜெயசக்தி என்பவர் திருமணம் ஆகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளதாகவும், அவரும் அவருடைய கணவரும் கூலி வேலை செய்து வருவாதாகவும், எனக்கு கடந்த 30 ஆண்டு காலமாக காது கேட்காமல் இருந்ததாகவும், இதனால் தனது அன்றாட வாழ்வில் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும் இது நாள் வரை அரசின் மூலமாக காதொலி கருவி வழங்கப்படும் என்ற ஒரு தகவல் தெரியாமல் இருந்ததாக தெரிவித்தார். இந்த சமயத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் பெரம்பலூர் என்.எஸ்.கே மஹாலில் நடைபெற உள்ளதாக தெரிந்து கொண்டு மனு அளிக்க வந்ததாகவும், மனு அளித்த மறு நிமிடமே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் புதிய காதொலி கருவி வழங்கப்பட்டதாகவும், 30 ஆண்டுகளாக கேட்காத காதுகள் இன்று மாவட்ட ஆட்சியர் வழங்கிய காதொலி கருவியினால் கேட்க முடிந்ததாகவும், இன்று முதல் அனைவரும் போல தம்மாலும் இசை, உரையாடல் கேட்க முடியும் என்றும், இந்த உதவியை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உடனடியாக கிடைக்க உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 32 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.தேவநாதன், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சொர்ணராஜ், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன், நகராட்சி ஆணையாளர் ராமர் உள்ளிட்ட அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்