பெரம்பலூர் மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 02 புதிய வாகனங்களின் சாவியினை வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 02 புதிய வாகனங்களின் சாவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.07.2025) வழங்கினார்.
ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்கல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனை திறம்பட செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும, கள ஆய்வு மேற்கொள்ளவும் பணிகளை திறம்பட கண்காணிக்க ஏதுவாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை 11.7.2025 அன்று தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலர் ஆகியோர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனத்தின் சாவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஊராட்சி செயலரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.குணசேகரன் மற்றும் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்