பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.87 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அல்லிநகரம், கீழமாத்தூர், இலந்தங்குழி, ஆதனூர், வரகுபாடி, அயினாபுரம், கொளக்காநத்தம், சில்லக்குடி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (05.08.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில், ரூ.3.87 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், அடிப்படை வசசிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டம்
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.87 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை திட்டங்களாக வழங்கி வருகின்றார்.
இன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணி, இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய மற்றும் கூடுதல் ஒரு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி, ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் புதிய மற்றும் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி, நபார்டு திட்டத்தின் கீழ் வரகுபாடி பகுதியில் ரூ.125.20 லட்சம் மதிப்பீட்டில் காரை – வரகுபாடி தார் சாலையை மேம்படுத்தும் பணி, சில்லக்குடி பகுதியில்ரூ.74.10 லட்சம் மதிப்பீட்டில் சில்லக்குடி – கல்லகம் செல்லும் தார் சாலையை மேம்படுத்தும் பணி, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் சில்லக்குடி ஊராட்சி மேத்தால் கிராமத்தில், ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.3.29 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அல்லிநகரம் ஊராட்சியில் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் நல மையக் கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கீழ் அயினாபுரம் ஊராட்சியில் ரூ.29.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் கொளக்காநத்தம் ஊராட்சி இருளர் தெருவில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குழந்தைகள் நல மையக் கட்டிடம் என மொத்தம் ரூ.57.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 3 புதிய திட்டப்பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கடந்த நான்காண்டுகளில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், எண்ணற்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், முன்னாள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன்,ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பிரேமலதா, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமரன். ஆலத்தூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூமா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
