கமுதி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள பொதுமக்களிடம் இருந்து
மனுக்கள் பெறப்பட்டன.
இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் காதர் முகைதீன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சேதுராமன்,
பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ்,பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சகாராணி,
துணைத் தலைவர் அந்தோணி சவேரியார்பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடேசன், வேலவன், வருவாய் ஆய்வாளர்கள் சதீஸ், பரமேஸ்வரி, பிரியதர்ஷினி, சிவக்குமார்,
கிராம நிர்வாக அலுவலர் தாரணிஅரசி, மற்றும்
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில்
மகளிர் உரிமைத் தொகை
பெறுவதற்கான விண்ணப்ப மனு மற்றும் வருவாய்துறை, தாட்கோ ,
விவசாயத்துறை,மாற்றுத்திறனாளிகள் துறை, தொழிலாளர் நலத்துறை,
பேரூராட்சி, சுகாதாரத் துறை, எரிசக்திதுறை, தோட்டக்கலை துறை,
சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மனுக்கள்
மொத்தம் 563 பொதுமக்களிடமிருந்து
பெறப்பட்டது
