ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. இந்த போட்டிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ்
தலைமையேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார் மாவட்ட உடற்கல்வி அலுவலர் வசந்தி, கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கொடியை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்து,நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். முதுகலை ஆசிரியர் ஹேமலதாஅனைவரையும் வரவேற்று பேசினார். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்களுக்கான 100 மீ, 200 மீ, 1500 மீ, ஓட்டம், தொடர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட
பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 38 பள்ளி மாணவர்கள் 610 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக போட்டிகள் தொடங்கும் முன் சமாதான புறா பறக்க விடப்பட்டது.
அபிராமம் உடற்கல்வி இயக்குனர் அன்சாரி, கே என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், வீரவேல்
மற்றும் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோர் போட்டிகள் நடைபெற உறுதுணையாக இருந்தனர்.ராமசாமிபட்டி உடற்கல்வி ஆசிரியை சாரதாதேவி நன்றி கூறினார்
