தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி!!
ராமநாதபுரம் மாவட்டம்.ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் கல்லூரி (ம) மாணவ மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் .காணொளி காட்சி மூலம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்தர்,ராமநாதபுரம் நகர மன்ற தலைவர் கார்மேகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
