ராமநாதபுரம் மாவட்டம், கமுதிவட்டம், மண்டலமாணிக்கம் ஊராட்சியில் மணல்குவாரிஅமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு…!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதிவட்டம் மண்டலமாணிக்கம் ஊராட்சியில் மண்டலமாணிக்கம் ஆற்றுப்படுகையில் மணல்குவாரி அமைக்க அரசு முயற்சிசெய்து வருகின்றது. கடந்தமாதம் கிராமமக்கள் ஒட்டு மொத்தமாக கமுதி வட்டாச்சியரிடம் எதிர்ப்பு மனு வழங்கிசென்றனர்.
இந்நிலையில் பரமக்குடி புதிய கோட்டாச்சியரும் கடந்தமாதம் பதவியேற்றார். கமுதி புதிய வட்டாச்சியரும் மூன்று தினங்களுக்கு முன்பு தான் பொறுப்பேற்றார். நேற்று திடீரென பரமக்குடி கோட்டாச்சியர், கமுதி வட்டாச்சியர் மேலும் அரசு அதிகாரிகள், சர்வேயர்கள் மண்டலமாணிக்கம் ஆற்றுபடுகைக்கு மண்டலமாணிக்கம் வழியாக சென்றால் கிராம மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என காவல்நிலையத்திற்கு எதிரே புதுக்குளம் செல்லும் ரோட்டில் சென்று புஞ்சைகள் வழியாக மண்டலமாணிக்கம் ஆற்றுபடுகை இடம் பாதை எல்லாம் அளந்து குச்சி ஊன்றினார்கள்.
இதனைகேள்விபட்டு கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஒடிவந்து வாக்குவாதம் செய்ய வேறுவழியின்றி ஊன்றிய குச்சிகளை பிடிங்கினர். பின்னர் மண்டலமாணிக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அதிகாரிகள் கிராமமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குவாரி அமைப்பதில் அதிகாரிகளும், அமைக்ககூடாது என்பதில் கிராமமக்களும் உறுதியாக இருக்கவே, கிராமமக்களிடம் மனுவை பெற்று சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “தற்போதே தண்ணீர் பஞ்சமாக உள்ளது. இதில் குவாரி அமைத்தால் கடுமையான தண்ணீர் பிரச்சனை ஏற்படும், நாங்கள் வாழவழி இல்லாத நிலை ஏற்படும். ஆகவே, எந்த காரணம் கொண்டும் குவாரி அமைக்க விட மாட்டோம். அடுத்த வாரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டமும், பின்னர் வட்டாச்சியர் அலுவலகத்திலேயே உண்ணாவிரத போராட்டம், சாலைமறியல் போராட்டம் என பலகட்ட போராட்டங்களை நடத்த எண்ணியுள்ளோம்” என்றனர்.
இதுகுறித்து மாவட்டநிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது என்பதை பொறுத்தே மண்டலமாணிக்கம் குவாரி பிரச்சனை முடிவுக்குவரும்.

