எடப்பாடி பழனிச்சாமி ஸ்ரீரங்கம் பகுதிக்கு வருகை தரும்போது பாஜக சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு வழங்குவது குறித்த ஆலோசனைக்கூட்டம்

முன்னாள் தமிழக முதல்வரும், NDA கூட்டணியின் தமிழக தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஸ்ரீரங்கம் பகுதிக்கு வருகை தரும்போது பாஜக சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு வழங்குவது குறித்த ஆலோசனைக்கூட்டம்
ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாலயா திருமண மண்டபத்தில் மண்டல் தலைவர் சதீஷ் தலைமையில் , மாவட்ட பொதுச் செயலாளர் லீமா சிவக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. மண்டல் பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.
மாவட்ட தலைவர் ஒண்டி முத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பிஜேபி கோவிந்தன், கள்ளிக்குடி ராஜேந்திரன், ஜெயந்தி வெங்கட்ராமன், முரளி சாஸ்த்திரி, திருவேங்கடம் யாதவ், சதேஷ் ஐயர், AGமுரளி, உப்பிலி சீனிவாசன், கமலி, சிவகார்த்திகேயன்,
சீனிவாசன் ரெங்காச்சாரிச்சாரி, முத்து விஜயன், தாயார் மணிகண்டன், சதீஷ்ஹரிகரன், விஸ்வநாதன், நல்லையன், முருகேசன், ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மண்டல் பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.
