கமுதி அருகே பெரிய உடப்பங்குளத்தில் வைகாசி பொங்கல் விழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் உள்ள பொட்டக்குளம் கண்மாயில் கரையில் உள்ள ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கருப்பர் கோவில்களின் சேமங் குதிரை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு
பொங்கல் வைத்து வழிபடும் விழா நடைபெற்றது.வருடா வருடம் நடைபெறும் இந்த வைகாசி பொங்கல் விழா
கடந்த 3-ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது.
ஏராளமான பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.தினமும் விசேஷ பூஜை நடைபெற்று வந்தது.
10-ம் தேதி செவ்வாய்க் கிழமை சந்தனமாரியம்மனுக்கு
பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும்,
11-ம் தேதி புதன்கிழமை திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கூட்டு வழிபாடு நடத்தினர். நேற்று பொட்டக்குளம் அய்யனார் கோவில் முன்பு கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கிடா வெட்டு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சந்தனம்,
பன்னீர், பால், இளநீர், திருநீரு போன்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம்
வழங்கப்பட்டது. பின்னர்
இரவு ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று முளைப்பாரி திருவிழா நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பெரிய உடப்பங்குளம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
