கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட 8, வார்டு பெரியார் நகரில் ரூ, 54 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட 8, வார்டு பெரியார் நகரில் ரூ, 54 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்கள் விளையாட்டு பூங்காவினை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க,அன்பழகன் எம்,எல்,ஏ, இன்று காலை 11 மணியளவில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் திமுக அவைத்தலைவர் வாசுதேவன், குடந்தை மாநகர மேயர் சரவணன், துணை மேயர் சு,ப,தமிழழகன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மூ காந்திராஜ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் முருகன், மாமன்ற உறுப்பினர் அனந்தராமன், மாநகர துணை செயலாளர் பிரியம் சசிதரன், உட்பட 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்